மின்னோட்டவியல் Book Back Questions & Answers

Unit 2 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

    ஒப்புமைப்படுத்துக

  • 1. நீர்: குழாய் : மின்னூட்டம் : __________

    Correct answer: கம்பி

    View explanation


  • 2. தாமிரம் : கடத்தி : மரக்கட்டை: _________

    Correct answer: இன்சுலேட்டர்

    View explanation


  • 3. நீளம் : மீட்டர் அளவு கோல் : மின்னோட்டம் : _______

    Correct answer: --

    View explanation


  • 4. மில்லி ஆம்பியர் : 10-3 :மைக்ரோ ஆம்பியர்: ______.

    Correct answer: 10 ^ -6A

    View explanation


  • கூற்று – காரணம்

  • 1. கூற்று (A) : தாமிரம், மின் கடத்துக்கம்பிகள் உருவாக்கப் பயன்படுகிறது... காரணம் (R): தாமிரம் குறைந்த மின் தடையைக் கொண்டுள்ளது

    அ.) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்

    ஆ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை

    இ) A என்பது சரி, ஆனால் R என்பது தவறு

    ஈ) A என்பது தவறு, ஆனால் R என்பது சரி

    Correct answer: அ.) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்

    View explanation


  • 2. கூற்று (A): அரிதிற் கடத்திகள், மின்னோட்டத்தை தன் வழியே அனுமதிப்பதில்லை.. காரணம் (R) : அரிதிற் கடத்திகளில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை

    அ.) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்

    ஆ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை

    இ) A என்பது சரி, ஆனால் R என்பது தவறு

    ஈ) A என்பது தவறு, ஆனால் R என்பது சரி

    Correct answer: அ.) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்

    View explanation


  • கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. மரபு மின்னோட்டத்தின் திசை, எலக்ட்ரானின் பாயும் திசைக்கு _________-ல் அமையும்

    Correct answer: எதிர்

    View explanation


  • 2. ஓரலகு கூலூம் மின்னூட்டமானது ஏறக்குறைய ________ புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்.

    Correct answer: 6.242x10 ^ 18

    View explanation


  • 3. மின்னோட்டத்தை அளக்க ___________ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.

    Correct answer: அம்மீட்டர்

    View explanation


  • 4. மின்கடத்துப் பொருட்களில், எலக்ட்ரான்கள் அணுக்களோடு ____________ பிணைக்கப்பட்டிருக்கும்.

    Correct answer: தளர்வாக

    View explanation


  • 5. மின்கடத்துத்திறனின் S.I. அலகு ______ ஆகும்.

    Correct answer: --

    View explanation


  • சரியா – தவறா எனக் குறிப்பிடு. தவறு எனில் சரியான விடையை எழுதுக

  • 1. எலக்ட்ரான் ஓட்டத்தின் திசை, மரபு மின்னோட்டத்தின் திசையிலேயே அமைகிறது

    Correct answer: தவறு

    View explanation


  • 2. வீடுகளில் உள்ள மின் இணைப்பில், அதிக மின் பளு இருந்தால், மின் உருகு இழை உருகாது.

    Correct answer: தவறு

    View explanation


  • 3. பக்க இணைப்பில், மின் சாதனங்கள் கிளைகளாக பிரிக்கப் படுகின்றன

    Correct answer: சரி

    View explanation


  • 4. மின்னோட்டத்தினை ‘A’ என்ற குறியீட்டால் குறிப்பிடுகிறாம்.

    Correct answer: தவறு

    View explanation


  • 5. குறை கடத்தியின் மின் கடத்துத்திறன், கடத்தி மற்றும் கடத்தாப்பொருளின் மின்கடத்து திறனின் மதிப்புகளுக்கு இடையே அமையும்.

    Correct answer: சரி

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், ‘ x’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளப் புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன?

    அ) 10 ஆம்பியர்

    ஆ) 1 ஆம்பியர்

    இ) 10 வோல்ட்

    ஈ) 1 வோல்ட்

    Correct answer: அ) 10 ஆம்பியர்

    View explanation


  • 2. கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், எந்த சாவியை (L,M அல்லது N) மூடினால் மின்விளக்கு எரியும்?

    அ) சாவி L மட்டும்

    ஆ) சாவி M மட்டும்

    இ) சாவிகள் M மற்றும் N மட்டும்

    ஈ) சாவி L அல்லது M மற்றும் N

    Correct answer: ஈ) சாவி L அல்லது M மற்றும் N

    View explanation


  • 3. சிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி ஆம்பியரில் (mA) அளக்கப்படுகிறது. எனில், 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.

    அ) 2.5 mA

    ஆ) 25 mA

    இ) 250 mA

    ஈ) 2500 mA

    Correct answer: இ) 250 mA

    View explanation


  • பொருத்துக

  • 1. மின்கலம்

    Correct answer: வேதி ஆற்றலை, மின் ஆற்றலாக மாற்றும் சாதனம்

    View explanation


  • 2. சாவி

    Correct answer: மின்சுற்றை திறக்க அல்லது மூட பயன்படுகிறது

    View explanation


  • 3. மின்சுற்று

    Correct answer: மின்னோட்டம் செல்லும் ஒரு துண்டிப்பான் மூடிய பாதை

    View explanation


  • 4. குறு சுற்று

    Correct answer: அதிக மின் பளு

    View explanation


  • 5. மின் உருகி

    Correct answer: மி ன் சு ற் றி ல் பயன்படுத்தப்படும் ஓர் பாதுகாப்பு சாதனம்

    View explanation