பொது மற்றும் தனியார் துறைகள்

Unit 1 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Summary


- சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் பொருளாதார நலனை மேம்படுத்துவதில் பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளுக்கான பணிகள் ஒதுக்கப்படுகின்றன. - பொது மக்களுக்கு அரசு பண்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள துறை பொதுத்துறை ஆகும். - மார்ச் 1950இல் அமைச்சரவை தீர்மானத்தால் திட்டக் குழு அமைக்கப்பட்டது மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் 1951ஆம் ஆண்டில் தொழில்துறை சட்டம் இயற்றப்பட்டது. - சமூக பொருளாதார மேம்பாடு என்பது ஒரு சமூகத்தில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் செயல் முறையேயாகும். - 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 65.80 ஆண்டுகள் எனவும் மற்றும் பெண்களுக்கு 68.33 ஆண்டுகள் ஆயுட்காலம் ஆகும். - தனியார் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களால் சொந்தமான, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் நிர்வகிக்கப்படும் ஒரு தேசிய பொருளாதாரத்தின் பிரிவு தனியார் துறை என்று அழைக்கப்படுகிறது.