பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

Unit 1 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- நாட்டு வருமானத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளுதல் - மதிப்பு, இயல்பு, செயல்பாடு மற்றும் பணத்தின் முக்கியத்துவத்தை பற்றி அறிந்து கொள்ளுதல் - சேமிப்பு மற்றும் முதலீடு பற்றி புரிந்து கொள்ளுதல் - கருப்பு பணம் பற்றி தெரிந்துக் கொள்ளுத

Summary


- பணம் என்ற வார்த்தை ரோம் வார்த்தையான “மோனேட்டா ஜுனோ” விலிருந்து பெறப்பட்டது. - பண்டமாற்று முறை – பணத்தை பயன்படுத்தாமல் மனிதர்கள் பண்டங்களுக்கு, பண்டங்களை பரிமாற்றம் செய்வது. - சில முக்கிய நிலைகள் மூலம் பணம் உருவானது. அவை பண்டப் பணம், உலோகப் பணம், காகிதப் பணம், கடன் பணம், அருகாமைப் பணம் மற்றும் சமீபத்திய பணத்தின் வடிவங்கள். - பணத்தின் மதிப்பு என்பது ஒரு நாட்டில் பண்ட பணிகளின் வாங்கும் சக்தியாகும். - ---- பணம் அதன் பணிகளால் வரையறுக்கப்படுகிறது. எவை பணமாக பயன்படுத்தப்படுமோ அவையெல்லாம் பணமாகும் பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே பணம். - வருவாயில் நடப்பு நுகர்விற்கு பயன்படாத ஒரு பகுதி சேமிப்பாகும். அவை எதிர்கால பயன்பாட்டிற்கு ஒதுக்கி வைக்கப்படுகிறது. - கருப்பு பணம் என்பது நாட்டின் ஒழுங்கு கட்டுப்படுத்துகையில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணமாகும்.