இடர்கள்

Unit 2 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


▶ இடர், பேரிடர் மற்றும் பேரழிவு ஆகியவைகளின் பொருளினை தெரிந்து கொள்ளல். ▶ இடரின் முக்கிய வகைகள், அதன் காரணங்கள் மற்றும் விளைவுகளைப் பற்றி விவரித்தல். ▶ இடர்கள் மற்றும் அவை சார்ந்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துத

Summary


- மக்கள், பொருளாதார வளங்கள் அல்லது கட்டமைப்புகளை அச்சுறுத்தக்கூடிய நிகழ்வுகள் இடர்கள் எனப்படுகிறது. - இடர்கள் மூன்று வகையாகும் அவை : இயற்கை இடர்கள், மனிதனால் உருவாக்கும் இடர்கள், சமூக - இயற்கை இடர்கள். - நில அதிர்வு, வெள்ளப்பெருக்கு, சூறாவளி, புயல்கள், வறட்சி, நிலச்சரிவு, சுனாமி, எரிமலை வெடிப்பு போன்றவை இயற்கை இடர்களாகும். - அபாயகரமான கழிவுகள், காற்று, நீர், நிலம் மாசடைதல், அணைகள் உடைதல், போர்கள் அல்லது உள்நாட்டுக் கலவரம், தீவிரவாதம் போன்றவை மனிதர்களால் உருவாக்கப்பட்ட இடர்களாகும். - இயற்கை சக்திகள் மற்றும் மனிதனின் முறையற்ற செயல்கள் இணைந்து ஏற்படுத்தும் இடர்கள் சமூக - இயற்கை இடர்களாகும்.