இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Unit 1 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


▶ இடம் பெயர்தலின் பொருள், காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றி கற்றறிதல். ▶ இடம் பெயர்தலின் வகைகளைத் தெரிந்து கொள்ளல். ▶ நகரமயமாக்கலின் கருத்தை விவரித்தல். ▶ நகரமயமாக்கலின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைப் பற்றி கற்றல். ▶ நகரமயமாக்கலின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளல்

Summary


- கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்தல் அதிக அளவில் காணப்படும் இடம் பெயர்வாகும். - இயற்கைக் காரணிகள், பொருளாதாரக் காரணிகள், சமூக-கலாச்சாரம், மக்கள் தொகை மற்றும் அரசியல் காரணங்களினால் இடம்பெயர்வு நடைபெறுகிறது. - கிராமங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்தல் மக்கள் தொகையின் இயற்கையான வளர்ச்சி, கிராமப்புறங்களை நகர்ப்புறமாக மறுசீரமைத்தல் போன்றவற்றால் நகரமயமாதல் நடைபெறுகிறது. - அதிக மக்கள் நெருக்கம், உள் கட்டமைப்பு வசதி பற்றாக்குறை, தொழில் வளர்ச்சி மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவை நகரமயமாதலின் முக்கிய பிரச்சனைகளாகும்.