நீரியல் சுழற்சி

Unit 3 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


▶ புவியில் காணப்படும் நீர் நிலைகளின் தன்மைகளைப் பற்றி புரிந்து கொள்ளுதல் ▶ நீரியல் சுழற்சியின் அடிப்படைக் கருத்துக்களை அறிந்துகொள்ளுதல் ▶ நீரியல் சுழற்சியின் பல்வேறுபட்ட கூறுகளைத் தெரிந்துகொள்ளுதல்

Summary


- புவியின் மிக முக்கிய கூறுகளில் நீர் ஒன்றாகும். எல்லா விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் உயிர்வாழ நீர் அத்தியாவசியமாகிறது. - ஏறத்தாழ 71% புவியின் மேற்பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது. இதில் 2.8% தூய நீராகவும், 97.2% சதவிகிதம் உப்பு நீராக கடலிலும், பெருங்கடலிலும் காணப்படுகிறது. - நீரியில் சுழற்சி என்பது உலக அளவிலான ஒரு நிகழ்வு ஆகும். இது கடலிலிருந்து நீரை வளிமண்டலத்திற்கும், வளிமண்டலத்திலிருந்து புவிக்கும், புவியிலிருந்து மீண்டும் கடலுக்கு எடுத்து செல்லும் ஒரு சுழற்சி ஆகும். - நீரியல் சுழற்சியில் ஆறு முக்கிய கூறுகள் உள்ளன. அவையானவன ஆவியீர்ப்பு, நீர் சுருங்குதல், மழைபொழிவு, நீர் ஊடுருவல், நீர்உட் கசிவு, மற்றும் நீர் வழிந்தோடல் - உலகின் வெப்பமண்டல பிரதேசங்களில் பொழிவானது தூறல் அல்லது மழைப்பொழிவு வடிவத்தில் காணப்படும் மழை, கல் மழை, உறைபனி, ஆலங்கட்டி மழை ஆகியன பொழிவின் பொதுவான வடிவங்களாகும். - புவியின் மேற்பரப்பிலுள்ள மண்ணின் அடுக்கிற்குள் நீர் புகுதலுக்கு நீர் ஊடுருவல் என்று பெயர். நீர் ஊடுருவல் மூலம் மண் தற்காலிகமாக தண்ணீரைச் சேமித்து மண்ணில் உள்ள உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் கிடைக்கச் செய்கிறது.