வானிலையும் காலநிலையும்

Unit 2 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


▶ காலநிலை மற்றும் வானிலையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுதல். ▶ காலநிலை மற்றும் வானிலைக் கூறுகளின் தன்மையை அறிந்து கொள்ளுதல் ▶ வானிலை கூறுகளை அளவிடக்கூடிய கருவிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுதல் ▶ ஓர் இடத்தினுடைய காலநிலை மற்றும் வானிலையின் வகைகளை அடையாளம் காணல்

Summary


- வானிலை என்பது ஓர் குறிப்பிட்ட இடத்தில் வளிமண்டலத்தில் நிலவும் நிலையாகும். காலநிலை என்பது ஓரிடம் அல்லது ஒரு பகுதியின் சராசரியைக் குறிப்பிடுவதாகும். (அதாவது 35 வருடங்களுக்கு ஒருமுறை) - வெப்பநிலை, பொழிவு, காற்றழுத்தம், ஈரப்பதம் மற்றும் காற்று ஆகியவை வானிலை மற்றும் காலநிலையின் முக்கிய கூறுகள் ஆகும். - வெப்ப நிலை என்பது காற்றில் உள்ள வெப்பத்தின் அளவைக் குறிப்பதாகும். - பூமியின் மேற்பரப்பில் குறிப்பிட்டபகுதியில் உள்ள காற்றினுடைய எடையே வளிமண்டலத்தின் அழுத்தம் அல்லது காற்றழுத்தம் என்றழைக்கப்படுகிறது. - கிடைமட்டமாக நகரும் வாயுவிற்கு காற்று என்று பெயர்