பாறை மற்றும் மண் Book Back Questions & Answers

Unit 1 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. கூற்று 1 - படிவுப் பாறைகள் பல்வேறு அடுக்குகளைக் கொண்டவை கூற்று 2 - படிவுப் பாறைகள் பல்வேறு காலங்களில் உருவானவை.

    அ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம்.

    ஆ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம் அல்ல.

    இ) கூற்று 1 சரி ஆனால் கூற்று 2 தவறு.

    ஈ) கூற்று 2 சரி ஆனால் கூற்று 1 தவறு.

    Correct answer: அ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம்.

    View explanation


  • கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத் தேர்வு செய்க.

  • 1. அ) தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் என்று அழைக்கப்படுகிறது. ஆ) பாறைகள் வானிலை சிதைவினால் மண்ணாக உருமாறுகிறது. இ) படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை. ஈ) தக்காண பீடபூமி பகுதிகள் தீப்பாறைகளால் உருவானவை.

    Correct answer: இ) படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை.

    View explanation


  • 2. அ) மண்ணரிப்பு மண் வளத்தை குறைக்கிறது. ஆ) இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது. இ) மண் ஒரு புதுப்பிக்கக் கூடிய வளம். ஈ) இலைமக்குகள் மேல் மட்ட மண்ணின் ஒரு பகுதியாகும்.

    Correct answer: ஆ) இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது.

    View explanation


  • கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. பாறைகளைப் பற்றிய அறிவியல் சார்ந்த படிப்பு

    Correct answer: பெட்ரோலஜி

    View explanation


  • 2. மண் பருத்தி விளைவிப்பதற்கு ஏற்றதாகும்.

    Correct answer: கரிசல்

    View explanation


  • 3. புவியின் தோல்' என்று அழைக்கப்படுகிறது

    Correct answer: மண்

    View explanation


  • 4. உருமாறிய பாறைகளின் ஒரு வகையான பாறை தாஜ்மகால் கட்ட பயன்படுத்தப்பட்டது

    Correct answer: வெள்ளை பளிங்கு

    View explanation


  • 5. பாறை 'முதன்மை பாறை' என்று அழைக்கப்படுகிறது

    Correct answer: தீப்பாறைகள்

    View explanation


  • சரியா, தவறா?

  • 1. தீப்பாறைகள் முதன்மை பாறைகள் என்று அழைக்கப்படுகிறது

    Correct answer: சரி

    View explanation


  • 2. களிமண் பாறையிலிருந்து பலகைக்கல் (Slate) உருவாகிறது.

    Correct answer: சரி

    View explanation


  • 3. செம்மண் சுவருதல் (Leaching) செயல்முறைகளில் உருவாகிறது

    Correct answer: தவறு

    View explanation


  • 4. இயற்கை மணலுக்கு மாற்றாக கட்டுமான பணிகளுக்கு “செயற்கை மணல்” (M-Sand) பயன்படுகிறது

    Correct answer: சரி

    View explanation


  • 5. படிவுப் பாறைகளைச் சுற்றி எரிமலைகள் காணப்படுகின்றன

    Correct answer: தவறு

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைக்கப்படுகிறது.

    அ) வளிமண்டலம்

    ஆ) உயிர்க்கோளம்

    இ) நிலக்கோளம்

    ஈ) நீர்க்கோளம்

    Correct answer: இ) நிலக்கோளம்

    View explanation


  • 2. உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்

    அ) ஆகஸ்ட் 15

    ஆ) ஜனவரி 12

    இ) அக்டோபர் 15

    ஈ) டிசம்பர் 5

    Correct answer: ஈ) டிசம்பர் 5

    View explanation


  • 3. உயிரினப் படிமங்கள் -------------- பாறைகளில் காணப்படுன்றன.

    அ) படிவுப் பாறைகள்

    ஆ) தீப்பாறைகள்

    இ) உருமாறியப் பாறைகள்

    ஈ) அடியாழப் பாறைகள்

    Correct answer: அ) படிவுப் பாறைகள்

    View explanation


  • 4. மண்ணின் முதல் நிலை அடுக்கு

    அ) கரிசல் மண்

    ஆ) பாறைப்படிவு

    இ) சிதைவடையாத பாறைகள்

    ஈ) பாதியளவு சிதைவடைந்த பாறைகள்

    Correct answer: ஈ) பாதியளவு சிதைவடைந்த பாறைகள்

    View explanation


  • 5. பருத்தி வளர ஏற்ற மண்

    அ) செம்மண்

    ஆ) கரிசல் மண்

    இ) வண்டல் மண்

    ஈ) மலை மண்

    Correct answer: ஆ) கரிசல் மண்

    View explanation


  • 6. மண்ணின் முக்கிய கூறு.

    அ) பாறைகள்

    ஆ) வாயுக்கள்

    இ) நீர்

    ஈ) கனிமங்கள்

    Correct answer: ஈ) கனிமங்கள்

    View explanation


  • 7. கீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?

    அ) வண்டல் மண்

    ஆ) கரிசல் மண்

    இ) செம்மண்

    ஈ) மலை மண்

    Correct answer: அ) வண்டல் மண்

    View explanation


  • பொருத்துக

  • 1. அ) கிரானைட் - 1. அடிப்பாறை ஆ) மண் அடுக்கு - 2. அடியாழப் பாறைகள் இ) பாரன் தீவு - 3. பட்டைப் பயிரிடல் வேளாண்மை ஈ) மண் வளப்பாதுகாப்பு - 4. செயல்படும் எரிமலை

    அ) 2 1 4 3

    ஆ) 2 1 3 4

    இ) 4 3 2 1

    ஈ) 3 4 2 1

    Correct answer: அ) 2 1 4 3

    View explanation


  • 2. அ) பசால்ட் (கருங்கல்) - 1. ஆந்த்ரசைட் ஆ) சுண்ணாம்புப் பாறை - 2. வெளிப்புற தீப்பாறைகள் இ) நிலக்கரி - 3. உருமாறியப் பாறைகள் ஈ) ஜெனிஸ் (நைஸ்) - 4. படிவுப்பாறைகள

    அ) 2 4 1 3

    ஆ) 2 4 1 3

    இ) 3 1 2 4

    ஈ) 3 1 4 2

    Correct answer: அ) 2 4 1 3

    View explanation