இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Unit 5 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- நமது அண்டை நாடுகளுடனான கொள்கைகள் குறித்துப் புரிந்துகொள்ளுதல். - வளர்ந்த நாடுகள் குறித்த இந்தியாவின் கொள்கையின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளுதல். - சர்வதேச நிறுவனங்களுடனான இந்தியாவின் உறவுகள் பற்றிய அறிவைப்பெறுதல். - பிரிக்ஸ் (BRICS) மற்றும் ஒபெக் (OPEC) நிறுவனங்களின் சாதனைகளை அறிதல். - உலக நாடுகளிடையே இந்தியாவின் உன்னத நிலை குறித்த மதிப்பினை உள்வாங்குதல்.

Summary


- இந்தியா எப்பொழுதும் அமைதியை விரும்பும் நாடாக இருப்பதோடு உலக அமைதிக்குத் தொடர்ந்து கடுமையாகப் போராடி வருகிறது. - இந்தியா அதன் அனைத்து அண்டை நாடுகளுடன் வரலாற்று ரீதியாகவும், சமூக-பொருளாதார, இனம் மற்றும் மொழியியல் உறவுகளைக் கொண்டுள்ளது. - பொது சுகாதாரம், சிறு அளவிலான தொழில்கள், தொலைத்தொடர்பு, கல்வி போன்றவற்றை மேம்படுத்துவதற்கும் மற்றும் சாலைகள், பாலங்கள் அமைப்பதற்கும் அண்டை நாடுகளுக்கு உதவுகிறது. - ஆய்வகக் கட்டடங்கள், மருந்தகங்கள், ஆழ்குழாய் கிணறுகள் போன்றவைகளை அமைத்திட அண்டை நாடுகளுக்குப் பெரும் நிதி உதவி செய்கிறது. - இந்தியா தன் அண்டை நாடுகளின் வளர்ச்சிக்குப் பண உதவி மற்றும் நிதி உதவி ஆகியவற்றை தன் பங்களிப்பாக முன்கூட்டியே செய்கிறது. - இந்தியா வல்லரசுகளுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளது. மேலும் தன் உள்நாட்டு வளர்ச்சிக்கான அதிகபட்ச நலனைப் பெற முயன்று வருகிறது. - ஐநா சபையின் அனைத்து முயற்சிகளிலும் இந்தியா தன் ஒத்துழைப்பை நல்குகிறது. - பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் இந்தியா ஒரு தீவிர உறுப்பினராக இருப்பதால் உலக அளவில் தன்னை வடிவமைக்கவும் இது வழிகோலுகிறது.