இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Unit 4 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Summary


- ஒரு அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையானது பிறநாடுகள் நோக்கி மேற்கொள்ளப்பட்ட கொள்கையின் முன்முயற்சிகளைப் பற்றியது ஆகும். - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிறைவேற்றும் பொறுப்பு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தைச் சார்ந்தது. - ஓர் இலக்கு சார்ந்த வெளியுறவுக் கொள்கையானது பிற நாடுகளுடன் மேம்பட்ட உறவினை அடைவதற்கான திறனைக் கொண்டுள்ளது. - இந்தியா சுதந்திரத்துக்குப் பிறகு காமன்வெல்த் நாடுகளில் இணைந்து பிற நாடுகளின் சுதந்திர இயக்கத்தை வலுவாக ஆதரித்தது. - இந்தியா பனிப்போரின் போது எந்த ஒரு கூட்டணியிலும் (ரஷ்யா – அமெரிக்கா) இணைத்துக் கொள்ளாமல் அணிசேராக் கொள்கையைக் கடைபிடித்தது. - உலக வல்லரசு நாடுகளுடனும் அண்டை நாடுகளுடனும் உறவை மேம்படுத்துவதில் இந்தியா தற்போது கவனம் செலுத்துகிறது.