மாநில அரசு

Unit 3 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- மாநில அரசின் அமைப்புப் பற்றிய அறிவினைப் பெறுதல். - ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் ஆகியோரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளைப் புரிந்து கொள்ளுதல் - மாநில சட்டமன்றம் பற்றி அறிதல். - மாநிலத்தின் நீதித்துறை மற்றும் அதன் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல்.

Summary


- மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்பு தலைவர் ஆளுநர் ஆவார். - ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுகிறார். - மாநில சட்டமன்றத்திற்கு அமைச்சரவை கூட்டுப் பொறுப்பானது. - சட்டமன்றம் மாநிலத்தின் உண்மையான அதிகார மையமாகும். - தற்போது 29 மாநிலங்கள் மற்றும் 7 (6 + 1) யூனியன் பிரதேசங்களுக்கு 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. - 1976 ஆம் ஆண்டு 42 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் உயர் நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வு அதிகாரத்தைக் குறைத்தது. - 1977 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 43 வது அரசியலமைப்பு சட்டதிருத்தம் மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு நீதிப்புனராய்வு அதிகாரத்தை வழங்கியது.