மத்திய அரசு

Unit 2 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரின் அதிகாரங்களைப் பற்றி அறிதல் - பிரதம அமைச்சர் மற்றும் அமைச்சரவை பற்றி அறிதல் - மக்களவை மற்றும் மாநிலங்களவை பற்றி புரிந்துகொள்ளுதல் - உச்ச நீதிமன்றம் பற்றி அறிதல்

Summary


- மத்திய அரசாங்கம் மூன்று அங்கங்களைக் கொண்டது. அவைகள் நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை ஆகியன. - குடியரசுத் தலைவர், பிரதம அமைச்சர் மற்றும் இதர அமைச்சர்களையும் நியமிக்கிறார். - இந்திய நாடாளுமன்றம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவைகள், குடியரசுத் தலைவர், மாநிலங்களவை (ராஜ்ய சபா) மற்றும் மக்களவை (லோக் சபா). - இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி ஆவார். அவர் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார். - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாக உச்ச நீதிமன்றம் விளங்குகிறது. - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.