இந்திய அரசியலமைப்பு

Unit 1 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதை அறிதல் - இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை அறிதல் - அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளைப் புரிதல் - அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளை அறிதல் - மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் மற்றும் அவசரநிலை பற்றிப் புரிதல்

Summary


- அமைச்சரவை திட்டக்குழு 1946ன் கீழ் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. - இந்தியா ஒரு இறையாண்மை மிக்க, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு என இந்திய அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது. - ’சிட்டிசன்’ என்ற சொல் ‘சிவிஸ்’ என்ற இலத்தின் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் ஒரு நகர அரசில் வசிப்பவர் என்பதாகும். - Dr. B.R. அம்பேத்கரின் கூற்றுப்படி 32வது சட்டப்பிரிவு 'அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா' ஆகும். - இந்திய அரசியலமைப்பில் அடிப்படை கடமைகள், முன்னாள் சோவியத் யூனியன் (USSR) அரசியலமைப்பிலிருந்து சேர்க்கப்பட்டன. - 2004ல் இந்திய அரசு மொழிகளை வகைப்படுத்த முடிவு செய்து புதிய வகைகளாக செம்மொழிகளை அறிவித்தது. - அரசியலமைப்பு பகுதி XX ல் 368வது சட்டப்பிரிவு, அரசியலமைப்பு சட்ட திருத்தம் செய்வதில் அரசியலமைப்பு திருத்த நடைமுறைகள் மற்றும் அது குறித்து நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பற்றி விவரிக்கிறது.