ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Unit 1 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


▶ பண்டைய காலம் மற்றும் இடைக்காலங்களில் நகரங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைப் புரிந்து கொள்ளுதல் ▶ ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நகரமயமாக்கலின் தன்மை மற்றும் அம்சத்தை பகுப்பாய்வு செய்தல் ▶ புதிய மையங்களான இராணுவ குடியிருப்புக்கள், மலைவாழிடங்கள் மற்றும் துறைமுக நகரங்கள் பற்றி அறிந்து கொள்ளுதல் ▶ மதராஸின் (சென்னை) தோற்றம் மற்றும் வளர்ச்சியைக் கண்டறிதல்

Summary


- நகர்ப்புற குடியேற்றத்தின் பரிணாமம் பல்வேறு வழிகளில், பல்வேறு கட்டங்களில் நிகழ்ந்துள்ளது. - மன்னரின் அரண்மனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நகரங்கள் தோன்றின. இடைக்காலத்தில் நகரங்கள் கோட்டை நகரம் அல்லது துறைமுக நகரமாக செயல்பட்டன. - ஆதிக்கத்தின் விரிவாக்கத்துடன் பிரிட்டிஷ் அதன் இருப்பிடம், நோக்கம் மற்றும் வளங்களைப் பொறுத்து புதிய நகரங்களை உருவாக்கியது. - 18ஆம் நூற்றாண்டின் கடைசியில் கல்கத்தா, பம்பாய் மற்றும் மதராஸ் மாகாணம் நகரங்களாக எழுச்சிபெற்றது. - சென்னை ஒரு காலத்தில் கிராமங்களின் தொகுப்பாக இருந்தது. 1639ஆம் ஆண்டு தொழிற்சாலை அமைக்க கிழக்கிந்திய நிறுவனத்தை சேர்ந்த சர் பிரான்சிஸ் டே என்பவருக்கு நிலம் வழங்கப்பட்டது. அது பின்னர் சென்னை என ஆயிற்று. - ஜூலை 17, 1996 அன்று மதராஸ் அதிகாரபூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது.