இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Unit 1 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- பண்டைய கால இந்தியாவில் கல்வி முறையைப் பற்றி அறிதல். - இடைக்கால மற்றும் நவீன இந்தியாவில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி பற்றி புரிந்து கொள்ளுதல். - ஆங்கிலேய ஆட்சியின் போது ஏற்பட்ட கல்வி வளர்ச்சியினை பகுப்பாய்வு செய்தல். - தேசியக் கல்விக் கொள்கையின் முக்கியத்துவம் பற்றி கலந்தாய்வு செய்தல். - தமிழ்நாட்டில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி பற்றி புரிந்து கொள்ளுதல்.

Summary


- கல்வியானது சமூக முன்னேற்றத்தின் அடித்தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. - இல்லங்கள், கோயில்கள், பாடசாலைகள் மற்றும் குருகுலங்கள் ஆகிய இடங்களில் அப்பகுதிக்கேற்ற கல்வி வழங்கப்பட்டு வந்தது. - இ ஸ்லா மியக் க ல் வி யை அறிமுகப்படுத்தியதன் மூ ல ம் இடைக்காலத்தில் கல்வி ஒரு மாற்றத்தைக் கண்டது. - இடைக்காலத்தின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருகைபுரிந்து ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தினர். - சுதந்திரத்திற்குப் பிறகு, 1968ஆம் ஆண்டின் முதல் தேசியக் கல்விக் கொள்கையானது இந்தியக் கல்வி வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. - 1964-65இல் இடைநிலைக் கல்வி அளவில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது