மக்களின் புரட்சி

Unit 4 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


▶ தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறை பற்றி அறிதல் ▶ ஆங்கிலேயர்களுக்கெதிராக நடைபெற்ற புரட்சியில் பூலித்தேவர் மற்றும் கட்டபொம்மனின் பங்கினைப் பற்றி புரிந்துகொள்ளுதல் ▶ தென்னிந்திய புரட்சி பற்றி தெரிந்துகொள்ளுதல் ▶ வேலூர் புரட்சியின் காரணங்கள் மற்றும் விளைவுகளைப் பற்றி அறிதல் ▶ 1857 ஆம் ஆண்டு புரட்சியின் காரணங்கள் மற்றும் விளைவுகளைப் புரிந்துகொள்ளுதல்

Summary


- விஜயநகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர். - மதுரை நாயக்கர்கள் பாளையக்காரர்களை நியமித்தனர். - ஆங்கிலேயர்கள் பெற்ற வரி வசூலிக்கும் உரிமையால் பாளையக்காரர்கள் கலகம் வெடித்தது. - கப்பம்(வரி) வசூலித்ததேகட்டபொம்மனுக்கும், ஆங்கிலேயருக்குமிடையே போட்டி ஏற்பட முதன்மை காரணமானது. - மருதுசகோதரர்கள்மூக்கையாபழனியப்பன் மற்றும் பொன்னாத்தாள் ஆகியோரின் மகன்களாவர். - பிரெஞ்சு இராணுவத்தின் மூலம் தீரன் சின்னமலை நவீனபோர் முறைகளில் பயிற்சி பெற்றார். - திப்பு சுல்தான் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கெதிராக போரிட்டார். - 1857 புரட்சியின் தலைவர்களில் இராணி லட்சுமிபாய் மிகச் சிறந்த மற்றும் மிகத்துணிச்சலான தலைவர் ஆவார்.