கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Unit 3 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


▶ ஆங்கில ஆட்சியின் கீழ் இருந்த நிலவருவாய் கொள்கை ▶ நிலவருவாய் கொள்கையின் நிறை, குறைகள் ▶ விவசாயிகளின் நெருக்கடிகள் மற்றும் கிளர்ச்சிகள்

Summary


- ஆங்கில அரசானது இந்தியாவின் பழமையான வேளாண்மை முறையையும் மற்றும் நிலவருவாய் கொள்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. - காரன்வாலிஸ் பிரபு 1793ல் நிலையான நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். - மகல்வாரி முறை, என்பது ஹோல்ட் மெகன்சி என்பவரது சிந்தனையில் உதித்த, ஜமீன்தாரி முறையின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமே ஆகும். - ராஜ்மகால் குன்றுகளுக்கு அருகிலிருந்த நிலங்கள் சந்தால்களால் பயிரிடப்பட்டன. - தீனபந்து மித்ரா என்பவர் நீல்தர்பன் என்ற ஒரு நாடகத்தை வங்க மொழியில் எழுதினார். - பூனா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் 1875ஆம் ஆண்டு ஒரு கலகத்தில் ஈடுபட்டனர். அது தக்காண கலகம் என்றழைக்கப்பட்டது . - பஞ்சாப் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக 1900ல் “பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம்” நிறைவேற்றப்பட்டது. - ஆகஸ்ட் 1921ல் மாப்ளா விவசாயிகள், ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். - பர்தோலி (குஜராத்) விவசாயிகள் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.