ஐரோப்பியர்களின் வருகை

Unit 1 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


▶ நவீன இந்திய வரலாற்று ஆதாரங்களின் வகைகள் பற்றி அறிதல் ▶ இந்தியாவில் போர்ச்சுகீசியரின் வர்த்தகத்தை புரிந்துகொள்ளுதல் ▶ இந்தியாவில் போர்ச்சுகீசியர்கள் மற்றும் டச்சுக்காரர்கள் ஆதிக்கத் தாக்கத்தை புரிந்து கொள்ளுதல் ▶ டென்மார்க்கின் காலனி குடியேற்றங்களை பற்றி அறிதல் ▶ ஆங்கில மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்களின் வருகை மற்றும் நிலைப்பாடுகளை அறிதல

Summary


- தமிழ் வரலாற்றுக் குறிப்பு ஆவணங்களில் முக்கியமாக இருக்க வேண்டிய ஒரு பெயர் ஆனந்தரங்கம். - தமிழ்நாடு ஆவணக் காப்பகம் (TNA) என அழைக்கப்படும் சென்னை பதிவாளர் அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது. - போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி பொதுவாக “மாலுமி ஹென்றி” என அழைக்கப்படுகிறார். - பிரான்சிஸ்-டி-அல்மெய்டா 'நீலநீர்க் கொள்கை'யைப் பின்பற்றினார். - முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் சூரத்தில் வர்த்தக மையம் அமைக்க ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு 1613ல் அனுமதி வழங்கினார். - பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி 1664ல் கால்பர்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. - பாண்டிச்சேரி பிரான்சின் மிக முக்கியமான மற்றும் வளமான குடியேற்றமாக விளங்கியது.