பலபடி வேதியியல்

Unit 3 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- இழைகளின் பல்வேறு வகைகளை மீட்டறிவர் - செயற்கை இழைகளின் பண்புகளை அறியும் பொருட்டுச் செயல்பாடுகளை மேற்கொள்வர் - செயற்கை இழைகளின் நன்மைகளையும் குறைபாடுகளையும் பட்டியலிடுவர் - இளகும் நெகிழிகளை இறுகும் நெகிழிகளில் இருந்து வேறுபடுத்துவர் - ரெசின் குறியீடுகளின் அடிப்படையில் பல்வேறு வகையான நெகிழிகளை இனம் கண்டறிவர் - மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலில் நெகிழிகள் ஏற்படுத்தும் தாக்கத்தினை உணர்வர் - 5 – R தத்துவத்தின் அடிப்படையில் கழிவுகளை அப்புறப்படுத்தும் முறைகளின் பல்வேறு படிநிலைகளை நினைவு கூர்வர் - உயிர் – நெகிழிகள் சார்ந்த சிக்கல்களை ஆராய்வர் - நெகிழிகளை உண்ணும் பாக்டீரியா பற்றிய தகவல்களைச் சேகரிப்பர் - கண்ணாடி ஒரு பலபடி என மீட்டறிவர்

Summary


- இழைகள் என்பவை, நீண்ட மற்றும் சரம் போன்ற கட்டமைப்புகளை உருவாக்குவதற்கெனப் பின்னிப்பிணைந்த மூலக்கூறுகளின் நீண்ட வடிவமாகும், அவை நெய்யப்பட்டோ, பின்னப்பட்டோ, படர்ந்தோ பிணைந்தோ காணப்படும். - இழைகள், இயற்கை மற்றும் செயற்கை என இருவகைப்படும். - மரக்கூழின்வேதியியல்செயல்முறைகளால் உருவாக்கப்பட்ட இழை ரேயானாகும். - பெட்ரோலிய எண்ணெய் மற்றும் வாயுவிலிருந்து பெறப்படும் செயற்கை இழையே நைலான் ஆகும். பாலிகாட் என்பது பாலியெஸ்டரும், பருத்தியும் சேர்ந்த கலவை, பாலிவுல் என்பது பாலியெஸ்டரும் கம்பளியும் சேர்ந்த கலவை. - தீயிலேற்றும் பொழுது செயற்கை இழைகள் உருகுகின்றன, இயற்கை இழைகள் எரிகின்றன. - ஒற்றைப்படிகள் என்ற சிறிய மூலக்கூறுகளின்பலஎண்ணிக்கையிலான உருப்படிகள், மீண்டும் பல்வேறு வகையான பிணைப்புகளால் இணைந்து, பலபடிகள் என்ற நீண்ட சங்கிலிச் சேர்மங்களை உண்டாக்குகின்றன. - வெப்பப்படுத்தும் பொழுது எளிதில் உருசிதைவு அடைந்தும், வளைந்தும் போகக்கூடிய நெகிழிகள் வெப்பத்தால் இளகும் நெகிழிகள் என்றழைக்கப்படும். - நெகிழிகள் பலவகையிலாவன. அவற்றுள் சிலவகைநெகிழிகள் பாதுகாப்பானதாகவும், சிலவகை பாதுகாப்பற்றதாகவும் இருக்கின்றன. எனவே, நெகிழிப் பொருள்களில் குறிப்பிடப்பட்டுள்ள ரெசின் குறியீட்டைக் கொண்டோ, சுருக்கெழுத்தினைக் கொண்டோ, அது எவ்வகை நெகிழி என அறிய முடியும். - பாலி லாக்டிக் அமிலம் அல்லது பாலிலாக்டைடு என்பது மட்கும் தன்மையுள்ள மற்றும் உயிர்ப்புத்திறன் கொண்ட இளகும் நெகிழி ஆகும். - நெகிழிகள் பலவகையிலாவன. அவற்றுள் சிலவகைநெகிழிகள் பாதுகாப்பானதாகவும், சிலவகை பாதுகாப்பற்றதாகவும் இருக்கின்றன. எனவே, நெகிழிப் பொருள்களில் குறிப்பிடப்பட்டுள்ள ரெசின் குறியீட்டைக் கொண்டோ, சுருக்கெழுத்தினைக் கொண்டோ, அது எவ்வகை நெகிழி என அறிய முடியும். - பிளாஸ்டிக்குகளை 5R – கொள்கையின் அடிப்படையில் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி கையாளலாம் தவிர்த்தல், மறுத்தல், குறைத்தல், மீண்டும் பயன்படுத்துதல், மறுசுழற்சி செய்தல் அல்லது மீட்டெடுத்தல், இல்லையெனில் குழிகளில் இட்டுப் புதைத்தல் என்றவாறு நெகிழிக் கழிவுகள் மேலாண்மை செய்யப்படுகிறது. - ரெசின் குறியீட்டு எண் #1 ஐ கொண்ட PET என்ற வகையான பிளாஸ்டிக்கை உண்டு செரிக்கும் வகையான Ideonellasakaiensis201 – F6 என்ற பாக்டீரியாவைக் கண்டறிந்து, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பாட்டில்களின் வகையான பாலி எத்திலுன் டெரிப்தாலேட் என்ற நெகிழியின் மாசுபாட்டிற்கு ஓரளவில் தீர்வு கண்டுள்ளனர்