அண்டம் மற்றும் விண்வெளி

Unit 2 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- பிரபஞ்சத்தின் தோற்றத்தை அறிதல் - விண்மீன்திரள்கள் மற்றும் அவற்றின் வகைகள் பற்றி அறிந்து கொள்ளுதல் - இரவு வானத்தில் தோன்றும் விண்மீன்கூட்டங்களை அடையாளம் காணுதல் - நட்சத்திரங்கள் குறித்த தகவல்களைப் பெறுதல் - இயற்கை மற்றும் செயற்கைக்கோள்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ளுதல். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பல்வேறு செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல்

Summary


அண்டத்திக் குறித்துப் படிக்கும் படிப்புக்கு வானியல் என்று பெயர் ™ அண்டத்தில் விண்மீன் திரள்கள், கோள்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள், துணைக்கோள்கள், பருப்பொருள் மற்றும் ஆற்றல் அடங்கியுள்ளது. ™ வளர்பிறைக் காலத்தில் உள்ள நிலவு முதல் கால்பாகம் எனவும், தேய்பிறைக் காலத்தில் உள்ள நிலவு மூன்றாம் கால் பாகம் எனவும் அழைக்கப்படுகிறது. ™ பிறை நிலவு என்பது நிலவானது அரையளவு ஒளியை விடக் குறைந்த அளவு ஒளியில் இருக்கும் காலம் ஆகும். கூனல் நிலவு என்பது நிலவானது அரையளவு ஒளியை விட அதிக ஒளியில் இருக்கும் காலம் ஆகும். ™ கோள்கள் தங்களது பாதையை திருப்பிக்கொள்ளும் நிகழ்வு பிற்போக்கு இயக்கம் எனப்படும் ™ நம் முன்னோர்கள் கூறிய புவிமையக் கோட்பாடானது, பூமியை மையமாகக் கொண்டு சூரியன் மற்றும் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்று கூறுகிறது. ™ சூரிய மையக் கொள்கையானது சூரியனை மையமாகக் கொண்டு பூமி மற்றும் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்று கூறுகிறது. ™ சூரியமையக் கொள்கைக்கு கண்கூடான நிரூபணத்தினை கலிலியோ தந்தார். ™ இந்த உலகில் ஆயிரம் கோடி விண்மீன் திரள்களாவது உள்ளன. ™ ஒரு விண்மீன் திரள் என்பது ஈர்ப்பு விசையால் ஒருங்கமைக்கப்பட்ட அனேக விண்மீன்களின் தொகுப்பு ஆகும். ™ புவியிலிருந்து பார்க்கும்பொழுதுதென்படும் விண்மீன் கூட்டங்களின் தொகுப்புக்கு விண்மீன் மண்டலம் என்று பெயர். ™ நிலையான சுற்றுப் பாதையில் கோள்களைச் சுற்றி வரும் பொருள்களுக்கு துணிக்கோள்கள் என்று பெயர். ™ பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தான் இந்திய விண்னவெளி ஆராய்ச்சி நிலையமாகும்(ISRO)