மின்னோட்டவியல்

Unit 2 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- மின்னோட்டம் பாயும் வீதம் பற்றி புரிந்து கொள்ளுதல் - மின் சுற்றுப் படம் வரையக் கற்றுக் கொள்ளுதல் - மரபு மின்னோட்டம் மற்றும் எலக்ட்ரான்களின் ஓட்டத்தை வேறுபடுத்தி அறிதல் - மின் சுற்றுகளின் வகைகளை, மின்னோட்டம் பாயும் வீதங்களின் அடிப்படையிலும், மின்விளக்கு இணைத்தல் அடிப்படையிலும் அறிந்துக் கொள்ளுதல் - மின்கலன் மற்றும் மின்கல அடுக்கு - வேறுபடுத்தி அறிதல் - மின்னோட்டத்தின் விளைவுகளையும், மின்னோட்டத்தைப் பாதிக்கும் காரணிகளையும் புரிந்து கொள்ளுதல் - மின்சுற்றில் பயன்படுத்தப்படும் மின் பொருட்களை அடையாளம் கண்டுணர்தல் - மின்சுற்றுக்களை வேறுபடுத்தி அறிதல் - எண்ணியல் கணக்குகளைச் செய்யவும், மின்சுற்றுகளை வரையவும் அறிந்துக்கொள்ளுதல்

Summary


- மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் ஆகும், ஓரலகு நேரத்தில் பொருளின் குறுக்குப் பரப்பு வழியே செல்லும் மின்னூட்டத்தின் அளவே மின்னோட்டம் என வரையறுக்கப்படுகிறது. - மரபு மின்னோட்டத்தின் திசையானது எலக்ட்ரான் ஓட்ட திசைக்கு எதிர் திசையில் அமையும். - ஓர் குறிப்பிட்ட பரப்பு வழியே ஒரு வினாடி நேரத்தில் ஒரு கூலூம் மின்னூட்டம் பாய்ந்தால் பாயும் மின்னோட்டத்தின் அளவு ஓரு ஆம்பியர் ஆகும். - நேரடியாகவோ அல்லது எளிதாகவோ மின்சாரம் அளிக்க இயலாத வெவ்வேறான சாதனங்களுக்கு எளிதில் மின்ஆற்றல் அளிக்க வல்ல மின்சாதனமே மின்கலன் எனப்படும். - லெக்லாஞ்சி மின்கலனின் எளிதில் எடுத்துச் செல்லத்தக்கதுமான ஓர் வடிவமே உலர் மின்கலனாகும். - வேதிவினைகள் மூலம் மின்சுற்றில் எலக்ட்ரான்களின் ஓட்டத்தை ஏற்படுத்தும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பே மின்கல அடுக்கு ஆகும். - மின்கலம் - என்பது வேதியாற்றலை மின்னாற்றலாக மாற்றும் ஓர் எளிய மின்வேதிக்கலனே ஓர் மின்கலனாகும். - அம்மீட்டர் - பாயும் மின்னோட்டத்தை ஆம்பியரில் அளவிடும் கருவியே அம்மீட்டர் ஆகும், சோதிக்கப்பட வேண்டிய மின் சுற்றில் அம்மீட்டரானது தொடர் இணைப்பில் இணைக்கப்படவேண்டும். - ஆம்பியர் (A ) - ஓரு விநாடி நேரத்தில் ஒரு கூலூம் மின்னோட்டம் பாயும் வீதமே ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது "- ஒரு பொருளின் மின்கடத்துத் திறன் அல்லது தன் மின்கடத்துத் திறன் என்பது அப்பொருள் மின்னோட்டம் கடத்தும் தன்மையின் அளவு ஆகும். - தன் வழியே பாயும் மின்னோட்டத்தை எதிர்க்கும் பொருளின் வலிமையை அளவிட்டுக் கூறும் பண்பே மின்தடையாகும். - குறைவான மின்சாரத்தை குறைந்த கால அளவிற்கு உருவாக்கும் மூலங்கள் மின்மூலங்கள் அல்லது மின் வேதி மூலங்கள் எனப்படும். - கரைசலில் மின்னோட்டத்தை அளிக்க வல்ல அயனிகளாக மாறும் தன்மை கொண்ட பொருள் மின்பகுளி எனப்படும்."