உடல் நலமும், சுகாதாரமும்

Unit 6 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- தன் உடலை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிதல் பற்கள், கண்கள், முடி இவற்றை எவ்வாறு பராமரித்தல் மற்றும் சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுதல். - தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றி அறிதலும் புரிதலும். - சில பொதுவான நோய்கள் மற்றும் அவற்றைக் குணப்படுத்தும் வழிமுறைகள் பற்றி அறிதலும் புரிதலும். - முதலுதவி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி அறிதல்.

Summary


- உடல் நலம் முழுமையான உடல், மன மற்றும் சமூக நலம் பெற்றதோடு அல்லாமல், நோயற்ற அல்லது பலவீனமின்மையையும் குறிக்கும் நிலை. - தொற்று நோய்கள் நோயினை உருவாக்கும் கிருமிகளின் தொற்றுதலால் ஏற்படக்கூடிய நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுடைய நபரிடமிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆரோக்கியமான நபருக்குத் தொற்றக் கூடிய நோய்கள். - தொற்றா நோய்கள் நோய்க் கிருமிகளின் தொற்றுதலின்றி ஏற்படக்கூடிய நோய்கள். பாதிக்கப்பட்டவரிடமிருந்து பிறருக்குப் பரவாதவை. முதலுதவி முதலுதவி என்பது மருத்துவ உதவி கிடைக்கும் முன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உடனடிச் சிகிச்சையாகும்.