தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Unit 5 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- தாவரங்களின் ஒரு மலர் எவ்வாறு கனியாக மாறுகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல். - மகரந்தச்சேர்க்கை மற்றும் மகரந்தச் சேர்க்கையாளர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுதல். - தன் மகரந்தச்சேர்க்கைக்கும், அயல் மகரந்தச் சேர்க்கைக்கும் இடையே வேறுபாடுகளை அறிந்து கொள்ளுதல். - வேர், தண்டு மற்றும் இலைகளின் மாற்றுருக்கள் அறிதல். - இந்த மாற்றுருக்கள் எவ்வாறு விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பயன் தருகிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல்.

Summary


- உயிரினங்களின் மிக முக்கியமான பண்பு இனப்பெருக்கம். தாவரத்தில் இரண்டு வகையான இனப்பெருக்க முறைகள் உள்ளன. 1. பாலிலா இனப்பெருக்கம் 2. பாலினப் பெருக்கம். - பூக்கும் தாவரங்களில் மலர்கள் தான் தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு. ஏனெனில் மலர்கள் தான் மகரந்தச்சேர்க்கை மற்றும் கருவுறுதல் மூலம் கனிகளையும், விதைகளையும் உருவாக்குகின்றன. - ஒரு மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு மகரந்தத்தாள் வட்டம். பெண் இனப்பெருக்க உறுப்பு சூலக வட்டமாகும். - மகரந்தப் பையில் உள்ள மகரந்தத் தூள்கள், சூலக முடியை அடையும் நிகழ்ச்சிக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர். மகரந்தச் சேர்க்கை இரண்டு வகைப்படும். அவை தன் மகரந்தச் சேர்க்கை மற்றும் அயல் மகரந்தச் சேர்க்கை.