அணு அமைப்பு

Unit 4 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

Summary


- ஒரு தனிமத்தின் வேதிப் பண்புகளை தக்க வைத்துக் கொள்ளத்தக்க மிகச் சிறிய துகளே அணுவாகும். - மற்ற துகள்களுடன் ஒப்பீடும்போது அவை அளவில் சிறியதாகும். - அணுக்களை மிகச் சிறியதாக இருப்பதால் வெறும் கண்களால் மட்டுமல்ல அவற்றினை நுண்ணோக்கியினாலும் காண இயலாது. - ஓர் அணுவில் மிகப் பெரும்பான்மையான இடம் வெற்றிடமாகும். - ஓரே தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியாகவும் வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் வெவ்வேறு மாதிரியாகவும் காணப்படும். - ஓர் அணுவில் நேர்மின்சுமை கொண்ட புரோட்டான்களும், மின்சுமையற்ற நியூட்ரான்களும் இணைந்து செறிவான உட்கரு கொண்டிருக்கும். - புரோட்டான்களும் நியூட்ரான்களும் இணைந்து நியூக்களியான்கள் என அழைக்கப்படுகின்றன.