நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Unit 3 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- தனிமங்கள் மற்றும் சேர்மங்களின் மூலக்கூறுகளைப் புரிந்து கொள்ளுதல் - பொதுவான தனிமங்களின் குறியீடுகளை அறிந்து கொள்ளுதல் - பொதுவாகப் பயன்படுத்தப்படும் தனிமங்களின் அணுக்கட்டு எண்ணைக் கணக்கிடுதல் - இயற்கையில், மனித உடலில், காற்றில் உள்ள தனிமங்கள் மற்றும் சேர்மங்களைப் பற்றி அறிதல் - திண்மம், திரவம் மற்றும் வாயுவில் ஏற்படும் வெப்ப விளைவுகளைப் புரிந்து கொள்ளுதல்.

Summary


- அணுக்கள் என்பது தனிமத்தின் மிகச்சிறிய துகளாகும். - தனிமங்கள் தூய பொருளின் எளிய வடிவங்களாகும். - ஒரு தனிமத்தின் மூலக்கூறுகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள ஒரேவகையான அணுக்களைக் கொண்டிருக்கும். - ஒரு சேர்மத்தின் மூலக்கூறுகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள பல்வேறு வகையான அணுக்களைக் கொண்டிருக்கும். - வேறு தனிமங்களின் மூலக்கூறுகளான நைட்ரஜன், ஆக்சிஜன் காற்றில் 99 சதவீதம் உள்ளன. - பருப்பொருளில் உள்ள துகள்களின் அமைப்பை அடிப்படையாகக்கொண்டு திண்மம், திரவம், மற்றும் வாயுக்களின் மீதான வெப்பவிளைவுகளை விளக்கலாம் - வெப்பப்படுத்துதலின்போது பருப்பொருளின் நிறை அவ்வாறே உள்ளது. - வேதியியல் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி மூலக்கூறுகளை உருவமைக்கலாம்.