அளவீட்டியல்

Unit 1 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- அடிப்படை மற்றும் வழி அலகுகளை அறிந்துக் கொள்ளுதல் - ஒழுங்கான மற்றும் ஒழுங்கற்றப் பொருள்களின் பரப்பு மற்றும் கனஅளவினைக் கண்டறியும் முறையினை அறிதல் - பொருள்களின் அடர்த்தி, பருமன் மற்றும் நிறை ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பை அறிதல் - வானியல் அலகு மற்றும் ஒளி ஆண்டு ஆகியவற்றைப் பற்றி அறிந்துக் கொள்ளுதல்

Summary


- வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிட இயலாத இயற்பியல் அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும். அவற்றிற்குரிய அலகுகள் அடிப்படை அலகுகள் எனப்படும். - அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ, அல்லது வகுத்தோ அளவுகள் வழி அளவுகள் எனப்படும். அவற்றிற்குரிய அலகுகள் வழி அலகுகள் எனப்படும். - ஒரு பொருளின் மேற்பரப்பே அதன் பரப்பளவு எனப்படும். இதன் SI அலகு சதுர மீட்டர் (அல்லது) மீ2 ஆகும். - ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத் தாளைப் பயன்படுத்தி காணலாம். - ஒரு முப்பரிமாண பொருள் வெளியில் அல்லது சூழிடத்தில் ஆக்கிரமித்துக் கொள்ளும் இடமே அப்பொருளின் கன அளவு அல்லது பருமன் எனப்படும். கன அளவின் SI அலகு கன மீட்டர் (அ) மீ3 ஆகும். - லிட்டர் என்பது திரவங்களின் கனஅளவைக் குறிக்கப் பயன்படும் பொதுவான ஓர் அலகாகும். ஒரு லிட்டர்= 1000 cc ஆகும். - ஒரு கொள்கலனில் ஊற்றக்கூடிய அதிகபட்ச திரவத்தின் பருமனே கலனின் ”கொள்ளளவு” எனப்படும். - ஒரு பொருளின் அடர்த்தி என்பது அதன் ஓரலகு பருமனில் (1 மீ3) அப்பொருள் பெற்றுள்ள நிறை ஆகும். - அடர்த்தியின் SI அலகு கிகி / மீ3. அதன் CGS அலகு கி / செமீ3. 1 கி/செமீ3 = 103 கிகி / மீ3. - அதிக அடர்த்தியைக் கொண்ட பொருட்கள் “அடர்வான” அல்லது “அடர்வுமிகு” பொருள்கள் எனப்படும். குறைந்த அடர்த்தியைக் கொண்ட பொருள்கள் “தளர்வான” அல்லது “அடர்வுகுறை” பொருள்கள் எனப்படும். - ஒரு திடப்பொருளின் அடர்த்தி ஒரு திரவத்தின் அடர்த்தியை விட அதிகமானல், அது அத்திரவத்தில் மூழ்கும். ஒரு திடப்பொருளின் அடர்த்தி ஒரு திரவத்தின் அடர்த்தையை விட குறைவானால், அப்பொருள் அத்திரவத்தில் மிதக்கும். - அடர்த்தி = நிறை/கன அளவு - நிறை = அடர்த்தி × கன அளவு - கன அளவு = நிறை/அடர்த்தி - ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு ஆகும்.1 வானியல் அலகு = 149.6×106 கிமீ = 1.496×1011 மீ. - ஒளி ஆண்டு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் கடக்கும் தொலைவே ஆகும். 1 ஒளி ஆண்டு = 9.46×1015 மீ."